புதுச்சேரியைச் சேர்ந்தவர் வி.ஹரிஷ். இவர் ‘Finance with Harish’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நிதி மேலாண்மை, சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மாத சம்பளத்தை எப்படி எல்லாம் சேமிக்கலாம்? மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் எந்தெந்த வகைகளில் முதலீடு செய்யலாம் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர் இருந்துள்ளனர். ஹரிஷின் இந்த ஆலோசனைகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பங்கு சந்தை முதலீட்டு வாரியமான SEBI அமைப்புக்கும் புகார்கள் சென்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஹரிஷின் சோசியல் மீடியா பக்கங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில்