இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தை, தனியார் நிறுவனப் பங்களிப்புடன் மேம்படுத்தி இயக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், விமான நிலையத்தின் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரிக்கலாம். முன்னதாக, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் சென்னை விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய அவர், பயணிகள் சேவை, விமான இயக்கம் மற்றும் சரக்குக் கையாளுதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தத் தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு தேவை எனக் கோரிக்கை வைத்திருந்ததாக