மாறிவரும் வாழ்வியல் முறையால் நமது உணவு பழக்க வழக்கங்களும் மாறி உடல் சாரந்த பல்வேறு பிரச்சனைகளை நாம் நாள்தோறும் சந்தித்து வருகிறோம். குறிப்பாக உடல் எடை ஏற்றம், இறக்கம் ஆகிய பிரச்சனைகள் பல பாதிப்புகளை உருவாக்குகிறது. உடல் எடை குறித்து பாரம்பரிய சித்த, வர்ம மருத்துவர் செந்தில்குமார் மிக எளிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
"சித்த மருத்துவத்தில் உடல் எடையை இயற்கையான வழிகளில் கூட்டவும், குறைக்கவும் வழிகள் உள்ளன. உடல் எடையை அதிகரிக்க மதியம் சாப்பிட்ட பிறகு நன்றாக தூங்கினால் போதும். ஆனால் இதை தொடர்ந்து செய்யக்கூடாது. சில நாட்களுக்கு இதை செய்துவிட்டு பின் அதிகமான எடையை அப்படியே நிலைத்திருக்கச் செய்யலாம். உடல் எடையை குறைக்க, சில வார்ம் அப் பயிற்சிகள் செய்யலாம். இவை தவிர