SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE : மாதவரத்தில் CM விஜய் ஆய்வு, அரசு மருத்துவனையில் இந்தி, இன்றைய முக்கிய அப்டேட்ஸ்

உள்ளூர் முதல் உலகம் வரை, எங்கெங்கு, என்னென்ன முக்கிய செய்திகள் என்பதை இங்கு லைவ் அப்டேட்டாக பார்க்கலாம்; இதோ முழு விவரம்

Written By Yuvashree M
Published: Oct 07, 2026, 09:34 AM IST | Updated: Oct 07, 2026, 11:12 AM IST
Join

முதல்வர் விஜய், இன்று மாதவரத்தை அடுத்துள்ள பால்பண்ணையில் ஆய்வு செய்கிறார்; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இண்டியா கூட்டணியினருடன் தேர்தல் ஆணையத்துக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டார். பின்னர், நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார்.

07 Oct 2026, 11:11 AM
அரசியலில் களமிறங்கும் தனுஷ்..!

நடிகர் தனுஷ், விரைவில் அரசியலில் இறங்கப்போவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

07 Oct 2026, 11:10 AM
அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்!

“திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாத்திரை கவர் வடிவமைப்பிலோ அல்லது மொழியிலே நாங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை; தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைக்கட்டி, மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல வேஷம் போடுவது ஏன்?” - கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவானையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரை கவரில் இந்தி இடம்பெற்றுள்ளதற்கு மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்.

07 Oct 2026, 11:10 AM
லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி

சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமையன்று ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) உயர்த்தியது. மத்திய வங்கி மற்ற வங்கிகளுக்குக் கடன் வழங்கும் விகிதமான 'ரெப்போ விகிதத்தில்', பிப்ரவரி 2023-க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் உயர்வு இதுவாகும்... (மேலும் படிக்க)
 

07 Oct 2026, 10:33 AM
ஆய்வக கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர்!

முதல்வர் விஜய், சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்; சுமார் ரூ.2.23 கோடியில் கட்டப்பட்டிருக்கும் ஆய்வக துணை கட்டடத்தையும் திறந்து வைத்திருக்கிறார்.

07 Oct 2026, 9:56 AM
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான கட்டம்

புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ஊதிய உயர்வு எந்த அளவில் இருக்கும் என்பது பெரும்பாலும் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' அளவைப் பொறுத்தே அமையும். 7-வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை 3.0-க்கு மேல் உயர்த்துமாறு பல அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.... (மேலும் படிக்க)

07 Oct 2026, 9:54 AM
டெல்லி அரசின் டபுள் குட் நியூஸ்

டெல்லி வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. டெல்லி அரசு இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. டெல்லி ஜல் வாரியம் (DJB), சுமார் 50,000 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக 'பணமில்லா மருத்துவ வசதி' (cashless medical facility) திட்டத்தைத் தொடங்கியுள்ளது... (மேலும் படிக்க)

07 Oct 2026, 9:45 AM
முதல்வர் விஜய் ஆய்வு

சென்னையை அடுத்த மாதவரத்தில் செயல்படும் பால்பண்ணையை முதல்வர் விஜய் ஆய்வு செய்கிறார்.

07 Oct 2026, 9:39 AM
நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட ராகுல் காந்தி!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்ததாக ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர்; குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பிற எதிர்கட்சி எம்பிக்களையும் நள்ளிரவில் விடுவித்தது, காவல்துறை.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES