SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

மேற்கு வங்கம் மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளிலும்; அசாமின் நாகோன் மக்களவை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 09, 2026, 06:51 PM IST | Updated: Oct 09, 2026, 07:11 PM IST
Join

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டிலும் ஆளும் தவெக வெற்றி பெற்றது.

அதேநேரத்தில், மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராமம், ரெஜிநகர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதேபோல், அசாம் மாநிலத்தின் நாகோன் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், மேற்கு வங்கம் மற்றும் அசாம் என அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றியை பதிவு செய்து, தனது பலத்தை அதிகரித்துக்கொண்டது.

மேலும் படிக்க | 57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

பிரபலமான நந்திகாரம் தொகுதி

மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமான தொகுதி நந்திகிராம். மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி வெற்றிபெற்ற தொகுதியாகும். ஆனால் அவர் பவானிபூர் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றதை தொடர்ந்து இந்த தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

2016இல் இதே தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற சுவேந்து அதிகாரி, பின்னர் பாஜகவுக்கு தாவினார். அங்கு 2021 தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிக் கண்டார். அதேபோல், 2026 தேர்தலில் சுவேந்து அதிகாரி பவானிபூர் தொகுதியிலும் மம்தா பானர்ஜியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நந்திகிராமத்தில் பாஜக சாதனை வெற்றி

இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் கடந்த அக். 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று முடிவுகள் வெளியாகின. இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹசி ராணி ராத் 1,64,427 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியை பெற்றார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுவேந்து அதிகாரியின் சந்தரநாத் ராத்தின் தாயார்தான் ஹசி ராணி ராத் ஆவார்.

அதாவது, 75.94% வாக்குகளை பெற்று அவர் பெரிய சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 41,674 வாக்குகளையே பெற்றார். அதாவது, 1,22,753 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஹசி ராணி ராத் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  Explained: கிரீன் கார்டுக்கு தடை!! இந்திய ஐடி ஊழியர்கள், நிறுவனங்கள் மீதான உடனடி தாக்கம் என்ன?

ரெஜிநகரை கைப்பற்றிய பாஜக

இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட ரெஜிநகர் இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் தலைவரான ஹூமாயூன் கபீர் கடந்த பொதுத்தேர்தலில் ரெஜிநகர் மற்றும் நவோடா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அந்த வகையில், இரண்டு வென்ற அவர், ரெஜிநகர் தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ரெஜிநகர் இடைத்தேர்தலில் பாஜகவின் சாக்ராவ் சர்கார் 1,29,914 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் வேட்பாளர் 54,098 வாக்குகளை பெற்று 2ஆம் இடத்தை பிடித்தார். 75,816 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெற்றது. பொதுத்தேர்தலில் பாஜக 64,660 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.

சிறுபான்மையினரும் பாஜகவின் பக்கம்...

சிறுபான்மையினரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே சாட்சி என முதல்வர் சுவேந்து அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ரெஜிநகரில் 75% வாக்காளர்கள் இஸ்லாமியர்கள் ஆவர், நந்திகிராம் தொகுதியில் 27% வாக்காளர்கள் இஸ்லாமியர்கள் ஆவர். இரண்டு தொகுதிகளிலும் வென்றதை அடுத்து 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 209 ஆக உயர்ந்துள்ளது.

அசாமில் பாஜக வெற்றி

அசாம் மாநிலத்தின் நாகோன் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., பிரத்யுத் போர்டோலோய், சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டதால், தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேவாஷிஷ் சர்மா 6,83,945 வாக்குகளையும், ஏஐயூடிஎஃப் வேட்பாளர் முகமது பத்ருதீன் அஜ்மல் 5,14,910 வாக்குகளையும் பெற்றனர். 1,69,035 வாக்குகள் (50.42%)வித்தியாசத்தில் பாஜகவின் தேவாஷிஷ் சர்மா வெற்றி பெற்றார். இவர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

காங்கிரஸ் படுதோல்வி

2024 மக்களவை தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சி இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 1,22,099 வாக்குகளை (9%) பெற்றது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் பாஜக பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க |  இந்தியாவின் பாஸ் அம்பானியா? எலான் மஸ்க் மீண்டும் சீண்டல்... முழு பின்னணி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES