• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சென்னைக்கு வரும் ஸ்டார்பக்ஸ், கையெழுத்தான MoU: 'தமிழகத்தை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி' முதல்வர் விஜய் பெருமிதம்

சென்னைக்கு வரும் ஸ்டார்பக்ஸ், கையெழுத்தான MoU: 'தமிழகத்தை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி' முதல்வர் விஜய் பெருமிதம்

Tamil Nadu Government: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்திற்கும், தொழில்துறைக்குக் கீழ் இயங்கும் மாநில அரசின் ஒருங்கிணைப்பு முகமையான கைடன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Written BySripriya Sambathkumar
Published: Sep 22, 2026, 09:28 AM IST|Updated: Sep 22, 2026, 10:09 AM IST
joinshare
சென்னைக்கு வரும் ஸ்டார்பக்ஸ், கையெழுத்தான MoU: 'தமிழகத்தை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி' முதல்வர் விஜய் பெருமிதம்
Image Credit: @CMOTamilnadu / Tamil Nadu Government MoU with Starbucks

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை: அமெரிக்காவிற்கு வெளியே தனது முதல் நிறுவன தொழில்நுட்ப மையத்தை (corporate technology hub) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் (Starbucks Coffee Company) அறிவித்துள்ளது. அந்த மையம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமையவுள்ளது.

முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தான MoU

இதன் மூலமாக, தமிழ்நாடு மற்றொரு உலகளாவிய தொழில்நுட்ப முதலீட்டை ஈர்த்துள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் செப்டம்பர் 21 அன்று தமிழ்நாடு அரசுடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. சென்னையில் அமையவுள்ள இந்த மையம் சுமார் 800 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இதில் ஆண்டுக்கு சராசரியாக ₹35 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்திற்கும், தொழில்துறைக்குக் கீழ் இயங்கும் மாநில அரசின் ஒருங்கிணைப்பு முகமையான கைடன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவைத்… pic.twitter.com/eV6PD8s5Xy

— CMOTamilNadu (@CMOTamilnadu) September 21, 2026

தமிழகத்தை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி: முதல்வர் விஜய்

ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது 'உலகளாவிய திறன் மையத்தை' அமைக்க சென்னையைத் தேர்ந்தெடுத்ததில் மாநில அரசு மகிழ்ச்சியடைவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள இந்த நம்பிக்கை, மாநில இளைஞர்களின் திறன்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த முதலீடானது உயர்தரமான பிற நிறுவனங்களை ஈர்க்கும் இடமாகத் தமிழ்நாடு திகழ்வதை வெளிப்படுத்தும் வகையிலும் அமையும் என்று அவர் கூறினார்.

இந்த முன்னெடுப்பு மாநிலத்திலுள்ள திறன்மிக்க இளைஞர்களுக்குப் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் எம். சாய்குமார், தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். விஜயகுமார், 'கைடன்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தீபக் ஜேக்கப் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | நடுநிலை பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட CM விஜய்!

வால்கிரீன்ஸை தொடர்ந்து வந்த ஸ்டார்பக்ஸ்

  • அமெரிக்காவின் மருந்தகச் சங்கிலி நிறுவனமான 'வால்கிரீன்ஸ்' (Walgreens), தனது முதல் இந்திய 'உலகளாவிய திறன் மையத்தை' (GCC) சென்னையில் அமைக்க ஒப்பந்தம் செய்த மூன்று நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • தரமணியில் உள்ள டிஎல்எஃப் டவுன்டவுனில் அமையவுள்ள வால்கிரீன்ஸ் மையம், முதல் ஆண்டில் 250-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்ள விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.

ஸ்டார்பக்ஸ் சென்னை தொழில்நுட்ப மையம்: வேலைவாய்ப்புகள்

  • ஸ்டார்பக்ஸ் தனது வணிகத் தேவைகளுக்கு ஏற்ப கட்டம் கட்டமாக ஊழியர்களைப் பணியமர்த்தும் என கூறப்பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட பணிகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக ₹35 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
  • சென்னையில் அமையவுள்ள இந்த அலுவலகம், சியாட்டில் மற்றும் நாஷ்வில்லில் உள்ள ஸ்டார்பக்ஸின் தற்போதைய தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு.
  • சென்னை கிளை நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும்.
  • பொறியியல் திறன், கல்வி நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஊழியர்களைத் தக்கவைக்கும் விகிதம் (employee retention rates) ஆகியவற்றின் அடிப்படையில் சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஸ்டார்பக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | காலை உணவுத் திட்டம் உணவுப் பட்டியல்! பள்ளி மாணவர்களுக்கு அரசின் குட் நியூஸ்

இந்தத் தொழில்நுட்ப மையம், இந்தியாவில் டாடா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்பக்ஸ் நடத்தி வரும் சில்லறை வணிகக் கூட்டு முயற்சியான 'டாடா ஸ்டார்பக்ஸ்' நிறுவனத்திலிருந்து தனித்துச் செயல்படும்.

உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்தை தேர்ந்தெடுக்கு காரணம் என்ன?

ஓல்ட் மகாபலிபுரம் சாலை (OMR), மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய தொழில்நுட்பப் பகுதிகளை உள்ளடக்கிய பிரத்யேக 'GCC காரிடார்' (GCC corridor) திட்டத்தை தமிழ்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.

GCC-களை ஊக்குவிப்பதற்கான மாநிலத்தின் சிறப்புத் திட்டத்தின் (2024-2027) கீழ், தகுதியுள்ள நிறுவனங்கள் அதிக ஊதியம் வழங்கும் பணிகளுக்கு ஊதிய மானியங்களைப் பெற முடியும்.

இந்த ஊக்கத்தொகையானது, தகுதியுள்ள ஊதியச் செலவுகளில் முதல் ஆண்டில் 30 சதவீதத்தையும், இரண்டாம் ஆண்டில் 20 சதவீதத்தையும், மூன்றாம் ஆண்டில் 10 சதவீதத்தையும் உள்ளடக்கியது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களை அறிவித்த வால்கிரீன்ஸ், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) மற்றும் EY போன்ற நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

மேலும் படிக்க | டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu