• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : தீபாவளி நாளில் 8 கொலைகள்! சென்னையில் காற்றுமாசு உயர்வு, கனமழை அலர்ட்..இன்றைய முக்கிய அப்டேட்ஸ்
Live Now

Tamil News LIVE : தீபாவளி நாளில் 8 கொலைகள்! சென்னையில் காற்றுமாசு உயர்வு, கனமழை அலர்ட்..இன்றைய முக்கிய அப்டேட்ஸ்

Tamil News LIVE Updates : தீபாவளி தினத்தையடுத்த நாளான இன்று, பல்வேறு முக்கிய அப்டேட்ஸ் வெளியாகி இருக்கின்றன. தமிழகத்தில் கனமழை அலர்ட், ஒரே நாளில் 8 கொலைகள் உள்ளிட்ட பல அப்டேட்ஸை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Written ByYuvashree M
Published: Nov 09, 2026, 10:18 AM IST|Updated: Nov 09, 2026, 03:19 PM IST
joinshare
Tamil News LIVE : தீபாவளி நாளில் 8 கொலைகள்! சென்னையில் காற்றுமாசு உயர்வு, கனமழை அலர்ட்..இன்றைய முக்கிய அப்டேட்ஸ்
Image Credit: TN LIVE News | Source : X Page
09 Nov 2026 14:56 IST
share

Gratuity Calculation: 10 ஆண்டு சர்வீஸ், ரூ.60,000 சம்பளம், கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும்

பணி ஓய்வுக்கு பிறகு அல்லது ஒரு ஊழியர் வேலையை விடும்போது கிடைக்கும் நிதி நன்மைகளில் பணிக்கொடை எனப்படும் கிராஜுவிட்டியும் ஒன்றாகும். ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள் தங்களது சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) தவிர, இந்த கூடுதல் தொகையைப் பெறலாம்... (மேலும் படிக்க)

09 Nov 2026 14:35 IST

Tiruchendur Murugan Temple: கந்த சஷ்டி திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (நவம்பர் 10) தொடங்க உள்ள நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
 

09 Nov 2026 14:33 IST

Rain Alert : கனமழைக்கு வாய்ப்பு!

தந்தை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09 Nov 2026 14:08 IST

Jobs Update: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (குழாய்த்திட்டப் பிரிவு - Pipelines Division), ஏழு பிரிவுகளின் கீழ் சுமார் 500 பயிற்சி இடங்களுக்கு (Apprentice positions) விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்... (மேலும் படிக்க)

09 Nov 2026 13:40 IST

Tamil Nadu Govt : காவலர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு

Tamil Nadu Govt : பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி என்ற முதலமைச்சர் அறிவிப்பை நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

09 Nov 2026 13:39 IST

Tamil Nadu government : தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!

Tamil Nadu government : தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் அளிக்கும் விதமாக 66 ஆண்டுகால வீட்டு கடன் விதிகளில் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

09 Nov 2026 13:13 IST

Indian High Commissions: கலக்கும் AI அவதாரங்கள்

உலகம் முழுதும் உள்ள பல நாடுகளில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரகங்களில், செயற்கை நுண்ணறிவின் பல அம்சங்களை இந்தியா பயன்படுத்தி பல புதுமைகளை செய்து வருகிறது. பொதுத் தகவல் தொடர்பு மற்றும் தூதரக ஆதரவிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இந்தியத் தூதரகங்களின் வளர்ந்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, சிப்ரஸ் நாட்டின் தலைநகர் நிகோசியாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் தனது முதல் செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் அவதாரமான 'அமாரா'வை அறிமுகப்படுத்தியுள்ளது... (மேலும் படிக்க)

09 Nov 2026 13:06 IST

Congress Donation: வரலாறு காணாத அளவில் குறைந்த நன்கொடை

காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடையின் மதிப்பு, 2025-26ம் நிதியாண்டில் சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அக்கட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான வீழ்ச்சியாகும். (மேலும் படிக்க)
 

09 Nov 2026 12:53 IST

Theni SSI Relief Fund : ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்கிய முதல்வர்!

தேனியில் உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ செந்தில் குமாரின் இறப்பு தமிழக காவல்துறைக்கு பேரிழப்பு என்று முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிவாரண தொகையையும் அறிவித்துள்ளார்.

09 Nov 2026 12:49 IST

Theni SSI Murder : காவல் துறை வீரவணக்கம்!

தேனியில், எஸ்எஸ்ஐ செதில்குமார் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களை தட்டிக்கெட்டதால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இவருக்கு போலீசார் வீர வணக்கம் செலுத்தி இருக்கின்றனர்.

09 Nov 2026 12:18 IST

Trichy Crime News : 2 சிறார்கள் வெட்டிக்கொலை! பழிக்குப்பழியா?

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே 2 சிறுவர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இதையடுத்து, இதற்கு பின் இருக்கும் காரணம் பழிக்குப்பழியா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். (மேலும் படிக்க)

09 Nov 2026 11:46 IST

ADMK Condemns : துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!

தண்ணீர் பிரச்சனை காரணமாக புகார் சொல்ல வந்தவரை, கண்மூடித்தனமாக துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் தாக்கியிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்ளுக்கு அதிமுக, துணை சபாநாயகருக்கு கண்டாங்களை எழுப்பியுள்ளது.

09 Nov 2026 10:59 IST

8th Pay Commission: ரூ.5 லட்சத்திற்கு மேல் அரியர் தொகை

7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2025 டிசம்பர் 31 அன்று அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததால், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டால், கணிசமான நிலுவைத் தொகை (arrears) கிடைக்க வாய்ப்புள்ளது.... (மேலும் படிக்க)

09 Nov 2026 10:58 IST

Delhi Pollution: மூச்சுவிட திணறும் மக்கள்

தீபாவளிக்கு மறுநாளான இன்று (நவம்பர் 9, திங்கள்கிழமை), டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதியில் காற்று அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியது. பட்டாசுகளிலிருந்து வெளியேறிய புகை, ஏற்கனவே மோசமாக இருந்த காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கியது... (மேலும் படிக்க)

09 Nov 2026 10:26 IST

Metro Train : ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

சென்னை நகரில் செயல்பட்டு வரும் மெட்ரோ சேவையை, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஒரு நாள் ஒரு மெட்ரோ ரயில் சேவை பாதித்தாலும் அவர்களின் அன்றாட வேலை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது இன்றைய மெட்ரொ சேவைகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து மெட்ரோவில் செல்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். (மேலும் படிக்க)

09 Nov 2026 10:24 IST

உலகின் மாசடைந்த நகரமாக மாறிய சென்னை!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சென்னை உலகின் அதிக காற்று மாசடைந்த நகரமாக மாறி இருக்கிறது. (மேலும் படிக்க)

09 Nov 2026 10:19 IST

Crime News : ஒரே நாளில் 8 கொலைகள்!

தமிழ்நாட்டில் தீபாவளி நாளன்று, ஒரே நாளில் மட்டும் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூரில் ரவுடி பிரித்விராஜ், தேனியில் எஸ்எஸ்ஐ செந்தில்குமார், சமயபுரத்தில் ராகுல் மற்றும் விஷால், மானாமதுரையில் ரவுடி விக்னேஷ், திருவள்ளூரில் இளம்பெண் மேகலா, திருச்சி புறாட்தாக்குடியில் ஐடி ஊழியர் கிரிஸ்டோபர் மற்றும் கல்லல் அருகே ரவுடி நவீன் ஆகியோர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

2

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

3

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

4

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

5

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil News LIVE Updates : தீபாவளி தினமான நேற்று ஒரே நாளில் 8 கொலைகள் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது. அதே போல, தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதன் காரணமாக ஒரே நாளில் அதிக மாசு நிறைந்த நகரமாக சென்னை மாறியிருக்கிறது. இதையடுத்து இன்றைய முக்கிய அப்டேட்ஸ் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.