விருத்தாச்சலம் அருகே பிஞ்சு குழந்தையின் உயிரைப் பறித்த டெங்கு காய்ச்சல். அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனப் பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றஞ்சாட்டுகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே சின்ன கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரின் மூன்றரை வயது மகள் யுவஸ்ரீக்கு கடந்த 11-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் அதிகரித்ததால் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறுநாள் காய்ச்சல் தீவிரமடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குச் சிறுமி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வழியில் ஆம்புலன்ஸ் பழுதாகி அரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் மாற்று ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு டெங்கு உறுதி செய்யப்பட்டது.