சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுமானக் கட்டுப்பாடுகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் சொத்துக்களையும் பாதிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலத்தின் எல்லையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டுமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் 16 வருவாய் கிராமங்களில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம், பெரும்பாக்கம் அருகே சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து, தனியார் நிறுவனம் சாலை அமைத்து கட்டுமானக் கழிவுகளைக் கொட்டியதாக எழுந்த புகாரில் இருந்து தொடங்கியது. இதுதொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்ததுடன்,