பரந்தூர் விமான நிலையத்திட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக, பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்படுவதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, சென்னையில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திக்கூறுகள் உள்ள இடங்களாக 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக இரண்டு இடங்களை தமிழ்நாடு அரசு பட்டியலில் சேர்த்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் ஆகிய இடங்கள், விமான நிலையத்திற்கான பரிந்துரையில் உள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனிடையே, தமிழ்நாடு தொழில்