ஒரு பெருநகரத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் சர்வதேச வர்த்தகத்திற்கும் பயணிகள் போக்குவரத்தைத் தாண்டி சரக்குப் போக்குவரத்து (Cargo) வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட சர்வதேச விமான நிலையம் மிக இன்றியமையாதது. இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தின் முதலீட்டைக் குறிப்பிடலாம். இந்தியாவில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான மெகா முதலீட்டைச் செய்ய ஃபாக்ஸ்கான் திட்டமிட்டபோது தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் போட்டியிட்டன.
ஆனால், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகிலேயே நிலம் ஒதுக்கப்பட்ட காரணத்தினால், அந்த வாய்ப்பு கர்நாடகாவிற்குச் சென்றதுடன், வெறும் ஒன்பது மாதங்களில் அங்கு முப்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாயின. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அண்டை மாநிலங்கள் அனைத்தும் சர்வதேசப் பயணங்களுக்காகச் சென்னை மீனம்பாக்கத்தை நாடி வந்த