சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் முதல் காரைப்பேட்டை வரையிலான 34.5 கிலோமீட்டர் சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 187 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 8 ஆண்டுகளைக் கடந்தும் முழுமையடையாமல் உள்ளது. இந்தப் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 17 மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் வாகன சுரங்கப்பாதைகளில் இதுவரை 8 மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாம்பாக்கம் மற்றும் சிப்காட் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளால், 15 மீட்டர் அகலமுள்ள சாலை 7.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகின்றன. இதன் காரணமாக, ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் இடையிலான