சென்னையில் புறநகர் ரயில் சேவையை தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் ரயில் சேவையில் புதிய மாற்றமாக கடந்தாண்டு ஏப்ரலில் ஏசி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஏசி ரயில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்பட்டது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரையிலான பரபரப்பான வழித்தடத்தில், சென்னையின் இரண்டாவது ஏசி மின்சார ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் புதிய சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில், ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எஃப்.-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில் சென்னை வந்தடைந்துள்ள நிலையில், பயணிகள் சேவைக்கு