சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஒற்றைச் சாளர இணையதளத்தில் கட்டட அனுமதி விவரங்களைப் புதுப்பிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பில்டர்கள் தரும் ஆவணங்களை எதனோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்று தெரியாமல் வீடு வாங்குவோர் விழிபிதுங்கி நிற்கின்றனர். அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கின் பின்னணியில் உள்ள நிலவரம் என்ன? சென்னை பெருநகரப் பகுதிகளில் அமையவுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் புதிய மனைப்பிரிவுகளுக்கு உரிய திட்ட அனுமதி மற்றும் ஒப்புதல்களை வழங்கும் முக்கியப் பணியை சி.எம்.டி.ஏ. மேற்கொண்டு வருகிறது. முன்பு இதுபோன்ற பெரிய அடுக்குமாடிக் கட்டடங்களுக்கான அனுமதி கோப்புகள் அனைத்தும் அரசுக்கு அனுப்பப்பட்டு, உரிய அரசாணை பெற்ற பின்னரே முடிவுகள் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அந்த முழு அதிகாரமும் நேரடியாக சி.எம்.டி.ஏ-வுக்கு