தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழை, தலைநகர் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அதே நேரத்தில், கனமழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், சாலைகளில் வெள்ளம் ஏற்படுவதும் நகரம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக உள்ளன. இதனைத் தவிர்க்கும் வகையில், சென்னையின் 15 மண்டலங்களிலும் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வழித்தடப் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சிறிய மற்றும் பெரிய கால்வாய்களில் படிந்துள்ள வண்டல் மண், ஆகாயத்தாமரை மற்றும் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மழைநீர் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, கால்வாய்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகள் அதிகம் உள்ள தென்சென்னையில், வேளச்சேரிக்கு கூடுதல் கவனம்