மாதவரம், வில்லிவாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூரை இணைக்கும் இந்த 5-வது வழித்தடம், வடசென்னையையும் தென்சென்னையின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தையும் இணைக்கும் மிக முக்கியமான பகுதியாகும். இதில் வில்லிவாக்கம் புறநகர் ரயில் நிலையம் என்பது சென்னையின் மிக பரபரப்பான சந்திப்புகளில் ஒன்று. தினசரி புறநகர் ரயில்கள் மற்றும் தொலைதூர விரைவு ரயில்கள் இடைவிடாமல் இயக்கப்படும் 5 தண்டவாளங்களுக்கு அடியில் சுரங்கம் தோண்டுவது பொறியியல் ரீதியாக மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ரயில் தண்டவாளங்களின் அதிர்வுகள் மற்றும் நிலத்தடி மண்ணின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிநவீன தரைத்தள பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம், மேலே செல்லும் ரயில் போக்குவரத்துக்கோ அல்லது சாலைப் போக்குவரத்துக்கோ எந்தவித பாதிப்பும் இடையூறும் இன்றி இப்பணி