சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
கொளத்தூர் மெட்ரோ நிலையத்தில் இருந்து கடந்த 2025 நவம்பர் 27ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய குறிஞ்சி சுரங்கம் தோண்டும் இயந்திரம், 351 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீனிவாசா நகர் வடக்கு முனையை வந்தடைந்துள்ளது. மொத்தம் 1.08 கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியின்போது மண், சிதைந்த பாறைகள், கடினமான பாறைகள் என மாறுபட்ட நில அமைப்புகளைக் கடக்க வேண்டியிருந்தது.
மேலும், 230 மீட்டர் வளைவு கொண்ட குறுகிய திருப்பத்தையும் கடந்துள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த 70க்கும் மேற்பட்ட