சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு மிக முக்கியமான மைல்கல் எட்டப்படவுள்ளது. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோமீட்டர் நீளத்தில் அமையவுள்ள 'வழித்தடம் 3'-ல், ராயப்பேட்டை முதல் ஆயிரம் விளக்கு வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடைய உள்ளன. சுமார் 900 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை, இரண்டாம் கட்டத் திட்டத்திலேயே சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு மிகக் கடுமையான சவாலாக அமைந்தது. பூமிக்கடியில் பரவியிருந்த கடினமான பாறைகள் ராயப்பேட்டையில் 22 மீட்டர் ஆழத்திலும், ஆயிரம் விளக்குப் பகுதியை நெருங்கும்போது வெறும் 16 மீட்டர் ஆழத்திலும் தென்பட்டன. இதனால் இயந்திரத்தின் துளையிடும் கத்திப் பகுதிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி, அவற்றை மாற்றி அமைக்கும்