சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், புறநகர் பகுதிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ள 133.64 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை புறவட்டச் சாலை (Chennai Peripheral Ring Road - CPRR) திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. சுமார் 17,958 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 வழித்தடங்களை கொண்ட முழுமையான அதிவிரைவுச் சாலையாக இது கட்டமைக்கப்பட்டு வருகிறது.
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த சாலையில் 8 பெரிய பாலங்கள், 7 சிறிய பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், வாகனங்களுக்கான 15 சுரங்கப்பாதைகள் மற்றும் 76 சிறுபாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல் நேரடியாக எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை