கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு, திருச்சியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் முகமது ஹுசைன் என்பவர் 46 கிலோ வெள்ளிப் பொருட்களுடன் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது இரண்டு கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து வெள்ளிப் பொருட்களைக் கேட்டுள்ளது. அவர் கொடுக்க மறுத்ததால், பட்டாக்கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு, வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த முகமது ஹுசைன், தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தலையில் 6 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரிடம் நடத்திய விசாரணையின்