சென்னையில் உருவான மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV, தனது வணிக விரிவாக்கத்தில் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், மூன்று தளங்களைக் கொண்ட பிரம்மாண்ட அனுபவ மையத்தை அந்நிறுவனம் திறந்துள்ளது. இந்த மையத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். ஏற்கெனவே செயல்பட்டு வந்த தொழிற்சாலை விற்பனை மையத்திற்குப் பதிலாக, வாடிக்கையாளர்கள் மின்சார மோட்டார் சைக்கிள்களை நேரடியாகப் பார்வையிட்டு அதன் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில் இந்தப் புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 240 வோல்ட் உயர் மின்னழுத்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தின் சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளவும், நிறுவனப் பணியாளர்களுடன் கலந்துரையாடவும், வாகனத்தை ஓட்டிப் பார்த்து முன்பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக தொழில் வளர்ச்சிக்