திருச்சி மன்னார்புரத்தில் உருவாகி வருகிறது காமராஜர் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையம்! மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில், ஒருங்கிணைந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக இந்த வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள், கடந்த 2025 ஏப்ரல் மாதம் தொடங்கின. 2026 செப்டம்பருக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பாக, இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றதால், சுமார் 4 மாதங்கள் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், 7 தளங்களைக் கொண்ட கட்டடத்தின் மேற்கூரைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. உள்புற மேற்கூரை