சினிமாவில் நடிகர்... சமூக வலைதளங்களில் பிரபலம்... சொந்த ஊரில் கொடை வள்ளல்! ஆனால், ரயிலில் பயணித்த மூதாட்டியிடம் 47 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயிலில் தனியாகப் பயணம் செய்த மூதாட்டியின் பையிலிருந்து 50 சவரன் தங்க நகைகளைத் திருடியதாக, இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவரை கேரள ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரே இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட 'ரீல்' (Reel) காணொளியிலிருந்து கிடைத்த தடயங்களைக் கொண்டு அவர் பிடிபட்டார்.
திருடப்பட்ட தங்க நகைகள், சென்னையில் இருந்து செங்கன்னூருக்குப் பயணம் செய்துகொண்டிருந்த குமாரி என்ற மூதாட்டிக்கு சொந்தமானவை. இந்தச் சம்பவம் நவம்பர் 3-ஆம் தேதி