பிரபல திருநங்கையுடன் தொடர்பில் இருந்த கணவனை மீட்டுத் தரக்கோரி பலமுறை புகார் செய்தும் மீட்டு தராததால் whatsapp மெசேஜ் போட்டுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண்... ராயப்பேட்டையில் இருக்கும் அவரது உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்... காதலிக்காக மனைவியை விட்டுச்சென்ற கணவன்.. நடந்தது என்ன?
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் ரதி. இவரது கணவர் ராஜேஷ். கடந்த சில வருடங்களாக ராஜேஷ் என்பவருக்கும் சென்னை எண்ணூர் பகுதியை சார்ந்த மலைகா என்ற திருநங்கைக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து ரதிக்கும் ராஜேஷுக்கும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை கண்டித்த ரதி இனிமேல் திருநங்கை மலேகா உடன் நீ தொடர்பில் இருந்தால் நான் இந்த வீட்டில் இருக்க