காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, 8 வயது சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருமாங்கழனி கிராமத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள், தாய் சொந்த ஊரான ஜார்க்கண்டிற்குச் சென்றிருந்ததால், தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி, தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியைத் தேடியுள்ளனர். ஆனால், சிறுமி கிடைக்காததால் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைக் கண்டுபிடிக்கத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.