ஈரோடு அருகே நகைக்காக உடன் பணியாற்றும் செவிலியரை கொலை செய்து நிர்வாணப்படுத்தி சாலையில் வீசி சென்ற கொலைகார சைக்கோவை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். கட்டுமான தொழிலாளியான இவரது மனைவி உத்ரா நர்சிங் படித்துள்ளார் . இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது .தம்பதியினர் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்ல கவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்கும், உத்ரா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி முதல் செவிலியராகவும் வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளார் . காலையில் ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லும்போது மனைவியை மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு