தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புதன்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில், மாநிலத் தலைநகர் உட்பட பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, திங்கள்கிழமை அன்று வட தமிழகக் கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையக்கூடும்.
இதன் விளைவாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர்,