சென்னை பள்ளிக்கரணையை அடுத்த எஸ்.கொளத்தூர் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணிற்கு கடந்த 2024ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டி அருகே உள்ள ஈச்சாங்கரணி பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது புவனேஸ்வரிக்கு 50 சவரன் தங்க நகை போட்டதாகவும், மாப்பிள்ளை ஜானகிராமனுக்கு 20 சவரன் தங்க நகை போட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று எஸ்.கொளத்தூரில் உள்ள அம்மா வீட்டில் அவர் இருந்தபோது விபரீத முடிவெடுத்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம்