சென்னையின் அடையாளமாகவும், அதே சமயம் பல ஆண்டுகளாகக் கடுமையான சுற்றுச்சூழல் சவாலாகவும் விளங்கும் கூவம் நதியை மீட்டெடுக்கும் விவகாரத்தில், தற்போது புதிய அறிவியல் ஆய்வும் அரசின் செயல்திட்ட நடவடிக்கைகளும் முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளன. கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், மாசின் தீவிரத்தைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான முக்கிய உத்தி மையங்களாகச் செயல்படக்கூடும் என சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ள அதே வேளையில், தமிழக அரசும் கூவம் நதியை இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
கூவத்தின் கிளை நதிகளில் உள்ள தடுப்பணைகள் குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தைவான் தேசிய கடல்சார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு, சர்வதேச சுற்றுச்சூழல் இதழில் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கண்ணப்பாளையம்,