அரும்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் சென்னை மெட்ரோ.. அங்கு வரப் போகும் மெகா ப்ராஜெக்ட் குறித்து விரிவாக பார்க்கலாம்
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில், பிரம்மாண்டமான 7 அடுக்குகள் கொண்ட வணிக வளாகத்தை (Commercial Complex) உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மெட்ரோ பயணக் கட்டணத்தை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று வழிகளில் வருவாயைப் பெருக்குவதற்கும், மெட்ரோ நிலையங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆலந்தூர், சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பகுதிகளைத் தொடர்ந்து, தற்போது அரும்பாக்கத்திலும் இந்த நவீன வணிக வளாகம் அமையவுள்ளது.
அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 17,872 சதுர