செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சென்னையில் புதிய கற்றல் மையத்தைத் திறந்துள்ளது காக்னிசன்ட் நிறுவனம். சென்னை சிறுசேரியில் உள்ள நிறுவனத்தின் வளாகத்தில், முதற்கட்டமாக, இந்த மையத்தில், 'காக்னிசன்ட் இம்மர்சிவ் லேர்னிங் சென்டர்' தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் பயிற்சியாளர்கள் நேரடியாக வகுப்புகளை நடத்துவதற்காக 58 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரே நேரத்தில் 1,822 பேர் அமர்ந்து பயிற்சி பெற முடியும். மேலும், குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, 208 பல்நோக்கு இருக்கைகள், கூட்ட அரங்குகள், நூலகம், பணியிட உணவகம்