இடைத்தேர்தல் நடைபெற்று வரும் தாராபுரம் தொகுதியில் பகல் 1 மணி நிலவரப்படி 55.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 1 மணி நிலவரப்படி 55.18% சதவீதம் பதிவாகியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இரு எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தவெக கட்சிக்கு மாறியதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் களம் அமைந்தது. பகல் 1 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 54% வாக்குகளும், தாராபுரத்தில் 55.23% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள