இந்திய விமானப்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை நடப்பு நிதியாண்டிற்குள் இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியாவின் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 176 ஆக உயரும்.