சென்னையின் முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கும் வகையில், அதைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏவும், சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதிக்குள் கட்டுமான அனுமதி வழங்க முடியாது என அறிவித்தது. இந்த உத்தரவால் பள்ளிக்கரணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அறிவியல் பூர்வமான ஆய்வுகள் இன்றி கட்டுமானத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த