சென்னையில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கான திட்டத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதியான பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், பட்டினப்பாக்கம் பகுதியில் இந்த பிரம்மாண்ட வளாகம் அமைந்தால் தங்களின் வாழ்வாதாரமும் மீன்பிடித் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, அப்பகுதி மீனவ மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுடன் எதிர்க்கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததால், பட்டினப்பாக்கம் திட்டத்தை மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்வது குறித்து அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை