மதுரை மாவட்டம் சத்திரவெள்ளாளப்பட்டியில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக சரளைக் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.5.39 கோடி இழப்பு ஏற்பட்டதாக கனிமவளத்துறை புகார் அளித்தது. இதன் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்து, அய்யர் பங்களாவில் உள்ள முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தியின் வீட்டில் டிஎஸ்பி பொன்ராம் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், பாலமேட்டில் உள்ள அவரது ஜல்லி கிரஷர் ஆலை மற்றும் உறவினர்கள் தன்ராஜ், பொன்ராம், மைத்துனர் ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.மூர்த்தி, “2019-ல் மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதியுடன் எனது நிலத்தை குவாரிக்கு குத்தகைக்கு விட்டேன். நான் மண், ஜல்லி, கல் எதுவும் எடுக்கவில்லை; அங்கு