சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நவ. 19ஆம் தேதி வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,693 அமெரிக்க டாலராகக் குறைந்து, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டியது. கடந்த 14 மாதங்களில் இல்லாத புதிய வீழ்ச்சியைப் பதிவு செய்த தங்கம், பின்னர் ஓரளவு மீண்டாலும் தொடர்ந்து அழுத்தத்திலேயே உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்காவின் வட்டி விகிதக் கொள்கை பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வேண்டியிருக்கலாம் என அமெரிக்க பெடரல் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை 3.75 முதல் 4 சதவீதம் வரை மாற்றமின்றி வைத்திருந்த பெடரல்