திருச்சி மாவட்டம், தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்திருப்பதுடன், சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி மாவட்டத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதிய தொழில் நிறுவனங்களை ஈர்க்கவும் புதிய திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மணப்பாறையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் SIPCOT தொழிற்பேட்டையின் அடுத்த கட்ட விரிவாக்கமாக 283 ஏக்கர் பரப்பளவில் Phase-II தொழிற்பேட்டை உருவாக்கப்பட உள்ளது. இப்பகுதியில் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொழில் நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மற்றொரு பெரிய திட்டமாக, துவாக்குடி–நாவல்பட்டு பகுதியில் 696 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துவாக்குடி மற்றும் நாவல்பட்டு