சென்னையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளைப் பராமரிக்கும் பொறுப்பை, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 70 கிலோமீட்டர் நீளமுள்ள முக்கிய சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், ஆர்காட் சாலை, உஸ்மான் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சாலைகள் பெரும்பாலும் பேருந்துப் போக்குவரத்து அதிகமுள்ள வழித்தடங்களாகவும், நகருக்குள் உள்ள நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளாகவும் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை - ஆர்காட் சாலை 6.4 கிலோமீட்டர், குன்னூர் நெடுஞ்சாலை 5.4 கிலோமீட்டர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை 4.8 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையான ஆர்காட்