இந்திய ரயில்களில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகளுக்கு RAC என்பது நிம்மதியும், அதே நேரத்தில் சிக்கலும் நிறைந்த ஒரு நடைமுறை. அதாவது, காத்திருப்புப் பட்டியலில் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கிறது RAC டிக்கெட். ஆனால், உறுதி செய்யப்பட்ட முழுமையான படுக்கை வசதி கிடைக்குமா என்பது கடைசி நேரம் வரை கேள்விக்குறியாகவே இருக்கும். குறிப்பாக, இரவு நேரப் பயணங்களில் ஒரே படுக்கையை இரண்டு பயணிகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், இருவரிடமும் முழுக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த முரண்பாடு குறித்து தற்போது ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. RAC முறையை முழுமையாக ரத்து செய்வதா அல்லது புதிய மாற்றங்களுடன் செயல்படுத்துவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முழுமையான படுக்கை வசதி