சென்னையில் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு... இனி கொஞ்சம் ரிலீஃப்! போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சிக்னல்களின் பச்சை விளக்கு நேரத்தை தானாக மாற்றும் Adaptive Traffic Control System... தற்போது 105 சிக்னல்களில் செயல்பாட்டில் உள்ளது. கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் ஒவ்வொரு சாலையிலும் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, வரிசை மற்றும் போக்குவரத்து வேகத்தை இந்த அமைப்பு கண்காணிக்கிறது. எந்த வழித்தடத்தில் அதிக வாகனங்கள் உள்ளன என்பதை அறிந்து, அந்தப் பகுதியில் பச்சை விளக்கு ஒளிரும் நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. போக்குவரத்து குறைவாக இருக்கும் சாலைகளுக்கு தேவையற்ற நேரம் ஒதுக்கப்படுவதில்லை. இதனால், பழைய Fixed-Time Signal முறையுடன் ஒப்பிடும்போது, EVR பெரியார் சாலை வழித்தடத்தில் ஒரு சிக்னல் சுழற்சிக்கு சராசரியாக 15 விநாடிகள்