சென்னையின் முக்கிய புறநகர் போக்குவரத்து மையமாக உருவெடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது அதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே சார்பில் மேற்கொள்ள வேண்டிய பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட பொது மேலாளர் ஷைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். தண்டவாளம் மற்றும் நடைமேடை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதல் நடைமேடை முழுமையாக தயாராகியுள்ள நிலையில், 2 மற்றும் 3-வது நடைமேடைகளின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. முதல் நடைமேடையில் தற்காலிக முன்பதிவு அலுவலகம் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஸ்கைவாக் பணியே தற்போது