தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘O.M’ திரைப்படத்தை வரவேற்கும் வகையில், கோவையில் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், மேள தாளத்துக்கு நடனமாடியும் படத்தின வெளியீட்டைக் கொண்டாடினர்.
திரையரங்கமே விழாக்கோலம் பூண்டிருக்க கோவையே தனுஷ் படத்தை கொண்டாடியது. தனுஷ், சாய் பல்லவி மற்றும் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'OM: ஆபரேஷன் மோல்' (OM: Operation Mole) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு, பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. சமூக வலைதளங்களில் (X) வெளியான ஆரம்பகட்ட கருத்துகளில், முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், படத்தின் படத்தொகுப்பு (editing) மற்றும் திரைக்கதை உள்ளிட்ட சில அம்சங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
'OM' திரைப்படம், ஒரு ரகசிய நடவடிக்கை (covert operation) மற்றும்