“குழந்தை பாக்கியம் என்பது வாழ்வில் மிக முக்கியமான விஷயமாகும். இந்த காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதை தம்பதிகள் தள்ளிப்போடுகிறார்கள். ஒருவருக்கு 40 வயதில் குழந்தை பிறக்கிறதென்றால், கணவன் மனைவி இருவருக்குமே பொறுப்பு அதிகமாக இருக்கும். 20-களில் இருக்கும் தம்பதிகளும் 40-களில் இருக்கும் தம்பதிகளும், குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் விதத்தில் பல வித்தியாசங்கள் இருக்கும். 40 வயதில் குழந்தை பிறந்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை. உடலுக்கும் அதற்கும் எந்த சன்பந்தமும் இல்லை. சில மருத்துவமனைகளில் 30-களில், 40-களில் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி அச்சுறுத்தும் கருத்துகளை தெரிவிக்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. உதாரணமாக, ஒரு பெண்ணிற்கு 28 வயதில் ஒரு குழந்தை பிறக்கிறதென்றும், 35 வயதில் அடுத்த குழந்தை பிறக்கிறதென்றும் வைத்துக்கொள்வோம். எந்த வயதில் எந்த குழந்தை பிறந்ததென்று