தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். லாரி ஓட்டுநரான இவர், ஏலக்காய் மூட்டைகளை மதுரைக்கு ஏற்றி வந்த போது லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது. இது தொடர்பாக அவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.இதனிடையே, இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக பாலகிருஷ்ணனை, செக்கானூரணி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த சூழலில், கடந்த 14 ஆம் தேதி அதிகாலை, காவல் நிலையக் கழிவறையில் அவர் உயிரிழந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் பாலகிருஷ்ணனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளியானது. அதில், அவரது உடலில் 5 இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்