மதுரையில் பிளஸ்-1 மாணவன் கொலை: தாய் பேசும் ஆடியோ வைரல்! மதுரை கூடல்நகரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தமிழ்செல்வன் (16) கடந்த செப். 6 அன்று கிரிக்கெட் விளையாடச் சென்ற நிலையில், மறுநாள் ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியுடன் பழகியதால் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்டனர். பிரேத பரிசோதனையில் காயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தமிழ்செல்வனின் தாயாரிடம் மற்றொரு மாணவர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.