சென்னை விமான நிலையத்தை சர்வதேசத் தரத்திற்கு மேலும் மேம்படுத்தும் வகையில், பிரம்மாண்ட விரிவாக்கத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளுக்கு இடையே, புதிதாக 5-ஆவது முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முனையத்தில் மட்டும் ஆண்டுக்கு 2 கோடி பயணிகளைக் கையாள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள 3-ஆவது முனையத்தையும் சேர்த்தால், சென்னை விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 5 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விமான நிலையத்தை விரிவாக்கினால் மட்டும் போதுமா..? அங்கு வரும் லட்சக்கணக்கான பயணிகள் போக்குவரத்து நெரிசலின்றி வந்து செல்ல வேண்டாமா..? இதற்காகத்தான் மெட்ரோ ரயில், மோனோரயில் மற்றும் உயர்மட்ட விரைவுச் சாலை என மூன்று