தமிழக முதலமைச்சர் விஜய் முதன்முறையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 119-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை விழா நடைபெறுகிறது. முதல் நாளான 28-ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும், 29-ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30-ஆம் தேதி குருபூஜை விழாவாகவும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.