கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன், சாதிய ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் மாட்டிறைச்சி சாப்பிடுவதைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில், மாணவர் அகிலனின் தற்கொலைக்குக் காரணமானதாகக் குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் இரண்டு மாணவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் வலியுறுத்தி, அவரது பெற்றோர் மற்றும் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாணவரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு