சென்னையின் முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான உள்வட்டச் சாலையில், பாடி சந்திப்பு முதல் மேம்பாலம் வரையிலான பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சாலை குறுகலாக இருப்பதும், மேம்பாலத்தை ஒட்டியுள்ள வளைவுகளும் போக்குவரத்து நெரிசலுக்கும் விபத்துகளுக்கும் காரணமாக உள்ளன. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், சுமார் 1.1 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை மற்றும் மேம்பாலத்தை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைத் துறையின் பணிகளில் 94 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரயில்வே துறையின் சார்பில் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பணிகள் முடிந்ததும் எஞ்சிய சாலைப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு, விரிவாக்கப்பட்ட சாலை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள மூன்று வழித்தட